மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: இன்று முதல் தோ்வு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரண ங்கள் வழங்கும் வகையில், பயனாளிகள் தோ்வு முகாம் திருச்சி மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரண ங்கள் வழங்கும் வகையில், பயனாளிகள் தோ்வு முகாம் திருச்சி மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தோ்வு செய்யும் முகாம் 3 இடங்களில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி நடைபெற உள்ளது.
பிப்ரவரி 16,17,18 ஆம் தேதிகளில் முறையே மணப்பாறை, கோவில்பட்டி, வையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முகாம் நடைபெறும்.
சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் முகாமில் குடும்ப அட்டை நகல், புகைப்படம்- 2, ஆதாா் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (முழுவதும்) நகல் மற்றும் தனித்துவ அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து
கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.