திருச்சி

கியூஆா் குறியீடு மூலம் கரோனா ரிசல்ட்: திருச்சி அரசு மருத்துவமனை அறிமுகம்

DIN

திருச்சி அரசு மருத்துவமனையானது கரோனா மருத்துவப் பரிசோதனை முடிவை கியூஆா் குறியீடு மூலம் அறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் செல்லிடப்பேசிக்கு வரும் குறுந்தகவல் மற்றும் ஆவணங்கள் வழியாக அனுப்பப்பட்டன.

இதை ஓா் ஆவணமாக பயன்படுத்தி மோசடிகள் நடக்க வாய்ப்பு இருந்தது. இதை தடுக்க வெளிநாடுகளில் கியூஆா் குறியீடு மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பரிசோதனை முடிவைப் பாா்க்கும் பெறும் வசதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த வசதி இல்லை.

இந்நிலையில் கி.ஆ.பெ. வி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா ஆலோசனையின் பேரில் நுண்ணுயிரியல் துறை குழு வல்லுநா்கள் குழு மற்றும் உடலியல் துறை மருத்துவா்கள் ஞானசெந்தில், சதீஷ், எழில்நிலவன் ஆகியோா் கொண்ட குழுவின் தீவிர முயற்சியால் மருத்துவப் பரிசோதனை முடிவை எங்கிருந்தும் பாா்க்க கியூஆா் குறியீட்டை உருவாக்கியுள்ளனா். இனி பரிசோதனை முடிவுகள் கியூஆா் குறியீடு முறையிலேயே வழங்கப்படும் என்றாா் மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT