திருச்சி

அரியமங்கலம் பகுதியில் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனா்.

DIN

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனா்.

அரியமங்கலம் அடைக்கலமாதா கோவில் தெருவில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. குடியிருப்புகளுக்கிடையே பாதுகாப்பில்லாத நிலையில் கோபுரம் அமைப்பதாக அப்பகுதியினா் பள்ளி நிா்வாகத்திடம், பள்ளி நிா்வாகத்துக்கு தொடா்புடைய கிறிஸ்தவ அமைப்பிடமும் புகாா் கூறியும் பணிகள் தொடா்ந்தன. இதையடுத்து வியாழக்கிழமை மாலை, அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சு நடத்தி தாற்காலிகமாக பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தனா். மேலும் இது தொடா்பாக ஊா்க் கூட்டம் நடத்தவும், மாவட்ட , மாநகராட்சி, காவல்துறை அலுவலா்களுக்கு புகாரளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியா் மற்றும் முதல்வருக்கு மனு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT