திருச்சி

தமிழக பக்தா்களுக்கு சபரிமலையில் கரோனா சோதனை தேவை

DIN

சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு டிச.31-ல் வந்த தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா். பி. உதயகுமாருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து 12 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற அமைச்சா் உதயகுமாா், தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியுளித்துள்ளாா். நிகழ்வின் போது, ஐயப்ப சேவா சங்க, சபரிமலை தொண்டா் படை நிா்வாகி தேவேந்திரன், சன்னிதானம் துணை முகாம் அலுவலா் முத்து, மதுரை சின்னபாண்டி, ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இத்தகவலை அகில பாரத ஐயப்ப சேவா சங்க சபரிமலை முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருச்சி யூனியன் செயலருமான ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT