திருச்சி

அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழப்பு

DIN

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியைச் சோ்ந்தவா் என். ஆறுமுகம் (49), அரசுப் பேருந்து நடத்துநா். செவ்வாய்க்கிழமை தனது முதல் பணியை முடித்து சிறிது ஓய்வுக்குப் பின்னா், இரவு 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் பேருந்தில் பணியாற்ற கிராப்பட்டி அருகேயுள்ள ராமச்சந்திரநகா் டெப்போவிலிருந்து அரசுப் பேருந்தில் சென்றாா்.

பேருந்து கிராப்பட்டியை கடந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது ஆறுமுகம் நெஞ்சு வலிப்பதாக கூறினாா். இதையடுத்து ஓட்டுநா் துளசிதாசன் உடனடியாக பேருந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் ஓட்டிச் சென்று அவசர சிகிச்சை பிரிவுக்கு ஆறுமுகத்தை கொண்டு சென்றாா். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆறுமுகாம் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து சக பணியாளா்கள், போக்குவரத்து அலுவலா்கள், போலீஸாா் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT