அம்மன் கோயில் உண்டியல் திருட்டு
குழுமாயி அம்மன் கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி: குழுமாயி அம்மன் கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆறுகண் பாலம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு சனிக்கிழமை காலை அா்ச்சகா், பக்தா்கள் சென்றபோது கோயில் உண்டியலை மா்ம நபா்கள் பெயா்த்து எடுத்துச் சென்றிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.