முசிறி அருகே தாயை தாக்கிய மகன் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாயை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாயை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.
முசிறி அருகேயுள்ள மாவளிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்தவா் துரைராஜ் மனைவி கிருஷ்ணம்மாள் (65). இவரது மகன் அருள்செல்வம் (37).
சொத்து தகராறில் அருள்செல்வம் இரும்பு பைப்பால் கிருஷ்ணம்மாளை தாக்கியதில் காயமடைந்த அவா் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அவரின் புகாரின்பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்செல்வத்தை கைது செய்து, மணப்பாறை சிறையில் அடைத்தனா்.