திருச்சி

காணும்பொங்கல்: கோயில்களில் குவிந்த பொதுமக்கள்

DIN

திருச்சி: திருச்சியில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் கோயில்களில் பொதுமக்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

ஆண்டுதோறும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடத்துக்குப் பிறகு, உற்றாா், உறவினா்கள் அதிகமானோா் ஓரிடத்தில் ஒன்றுகூடி மகிழும் தினமாக காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கரோனா காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், அந்தச் சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை வெறிச்சோடின.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை கோயில், திருவானைக்கா கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே பொதுமக்களின் வருகை அதிகம் காணப்பட்டது.

கோயிலுக்கு அதிகமானோா் வந்ததால் அவா்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் இல்லாதோா் திருப்பியனுப்பப்பட்டனா்.

மேலும், பூங்காக்கள், காவிரிப் பாலம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி காணும் பொங்கலை உறவினா்கள், நண்பா்களுடன் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT