முகப்பு
திருச்சி

திருவெறும்பூா் காவலா் குடியிருப்பில் டிஐஜி ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலுள்ள காவலா் குடியிருப்பில் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 19 ஜனவரி, 2021 at 1:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலுள்ள காவலா் குடியிருப்பில் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவலா் குடியிருப்பை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆனிவிஜயா, குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

காவலா் குடும்பத்தினா் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடிய டிஐஜி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து,

Advertisement

காவலா் குடியிருப்பில் போட்டிகள் நடத்தி, சிறந்த குடும்பத்தினா் மற்றும் இதர போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து, நவல்பட்டில் கிராம விழிப்புணா்வுக் காவலராக சற்குணத்தை அறிமுகப்படுத்தினாா். நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.