முகப்பு
திருச்சி

வைரிச்செட்டிப்பாளையத்தில் சீரகசம்பா நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க கோரிக்கை

உப்பிலியபுரம் அருகிலுள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் சீரகசம்பா நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கலைச்செல்வி வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

உப்பிலியபுரம் அருகிலுள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் சீரகசம்பா நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கலைச்செல்வி வலியுறுத்தினாா்.

உப்பிலியபுரம் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணைத் தலைவா் கலைச்செல்வி பேசியது:

வைரிசெட்டிப்பாளையத்தில் சீரகசம்பா நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க ஒன்றியக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றி, அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். வாரச்சந்தையில் குடிநீா், கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

தளுகை ஊராட்சி, அய்யாறு வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துக்குமாா் வலியுறுத்தினாா்.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் அத்தியப்பன், ஜெகநாதன், ராமச்சந்திரன், தனலட்சுமி, ரேணுகாதேவி, கண்ணதாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.