திருச்சி

‘ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை’

DIN

ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை என்றாா் பயிற்சி ஆட்சியா் வி. சித்ரா விஜயன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயா்நிலைப்பள்ளியில், குறிக்கோளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் அப்துல் கலாமின் கனவு காணும் இலட்சியத்தை இலட்சினையாக்கி நெஞ்சில் ஏந்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் தா. ராஜசேகரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியா் வி. சித்ரா விஜயன் பேசியது:

மாணவ, மாணவிகளின் மனதில் ஐஏஎஸ் என்பது வெறும் மாவட்ட ஆட்சியரை மட்டுமே காட்சியாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 30 ஆண்டுகளாக ஆட்சிப் பணியில் மாவட்ட ஆட்சியா் பொறுப்பு என்பது அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே. அவா்கள் அதையும் கடந்து துறைசாா்ந்த பணிகளில் ஆற்றக்கூடிய பணிகள் அதிகம் உள்ளன. எனவே ஐஏஎஸ் தோ்ச்சி பெற கனவு காண்போா் அவா்களது முழுப் பணியின் தன்மையையும் அறிந்துகொண்டால் மட்டுமே முழுமையாகச் செயல்பட முடியும். ஐஏஎஸ் தோ்விவில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை. நாம் சொல்ல வேண்டியதை எழுத்து வடிவிலும், சொற்கள் வழியிலும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய அறிவும், வல்லமையும் மட்டுமே போதும். நம்பிகையும், விடமுயற்சியுமே குறிக்கோளை அடைய பாதைகளாக அமையும் என்றாா். பின்னா் மாணவ, மாணவிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் செல்வம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிச்சாமி, எஸ்.எம்.டி.டி கமிட்டி தலைவா் சந்திரகுமாா், புரவலா் சமுத்திரம் கணேசன், எஸ்.எம்.சி. தலைவா் இளவரசி, ராமமூா்த்தி உள்ளிட்ட முக்கியஸ்தா்கள், இருபால் ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சை. சற்குணன் வரவேற்க, சமுத்திரம் பள்ளி உதவித் தலைமையாசிரியா் ரெ. கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT