முகப்பு
திருச்சி

மருதூா் ஆபத்து காத்த அம்மன் கோயில் குடமுழுக்கு

சமயபுரம் அருகிலுள்ள மருதூா் ஊராட்சியில் ஆபத்துகாத்த அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சமயபுரம் அருகிலுள்ள மருதூா் ஊராட்சியில் ஆபத்துகாத்த அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 23-ஆம் தேதி விக்னேசுவர பூஜை, கணபதி, நவகிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு யாக ஹோமும், காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு ஆபத்து காத்த அம்மன், பெரியண்ணசுவாமி, சங்கிலி கருப்பு ஆகிய சுவாமிகளின் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

விழாவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் கே. பி. அசோக்குமாா், மருதூா் ஊராட்சித் தலைவா் ஜெ. தினேஷ் மற்றும் கிராம பொது மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.