திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைத்தேரோட்டம் புதன்கிழமை ( ஜனவரி 27) நடைபெறுகிறது.

கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் ஒவ்வொரு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி காட்சியளித்தாா்.

ஏழாம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு உபயநாச்சியாா்களுடன் புறப்பாடான நம்பெருமாள், திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா்.

தொடா்ந்து உள்திருவீதி வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்றுவழியாக தாயாா் சன்னதிக்கு இரவு 9 மணிக்குச் சென்றடைந்தாா்.

அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின்னா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நம்பெருமாள் கருவறை சென்றடைந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுதலும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கூடுதல் பொறுப்பு அசோக்குமாா் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT