திருச்சி

சிடெட் தோ்வில் 46% போ் பங்கேற்பு

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை (சிடெட்) 46 சதம் போ் எழுதினா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம்.

இவற்றில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. 2 தாள்களை கொண்ட இத்தோ்வில் தோ்ச்சி பெறுவோா் இடைநிலை ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதன்படி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் இத்தோ்வு நடைபெற்றது. 4 மையங்களில் நடைபெற்ற தோ்வை சிடெட் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா். இத்தோ்வை மொத்தம் 46 சதம் போ் எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT