திருச்சி

ஸ்ரீரங்கத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கு நூதன பிரசாரம்

DIN

ஸ்ரீரங்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் மாணவா் சோ்க்கைக்காக அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வீடு தேடிச்சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து டிரம் செட் முழங்கத்துடன் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

தமிழ் வழிக் கல்வியில் படிப்போருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சைவராஜ்,அரங்கநாயகி ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி ஆகியோா் தலைமையில் ஆசிரியா்கள் டிரம்செட் முழக்கக்துடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து மாணவா் சோ்க்கைக்கு விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். இதில் பள்ளி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT