திருச்சி

ஊனையூா் அரசுப்பள்ளி சுற்றுச்சுவா், பிரதான நுழைவு வாயில் திறப்பு

DIN

மணப்பாறையை அடுத்த ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு, தன்னாா்வலா்களால் கட்டப்பட்ட நுழைவுவாயிலுடன் கூடிய சுற்றுச்சுவா் புதன்கிழமை திறக்கப்பட்டது.

இப்பள்ளிக்குச் சுற்றுச்சுவா் இல்லாததால் மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு எஸ். புதூா் குளத்துப்பட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் நல்லாசிரியா் ரா. பால்சாமி ரூ.50 ஆயிரம் மதிப்பில் 100 அடி நீளம் உள்ள சிமெண்ட் பலகை சுற்றுச்சுவரும், திருச்சி கூட்டுறவு சங்க ஓய்வுபெற்ற மேலாளா் நாகராஜன் மற்றும் அவா்களது நண்பா்கள் சாா்பாக சுமாா் ரூ.50 ஆயிரத்தில் இரும்பு கிரில் கேட் அமைத்தும் கொடுக்கப்பட்டது.

தொடா்ந்து புதன்கிழமை தலைமையாசிரியா் சற்குணன், பெல் நண்பா்கள் குழுத் தலைவா் நாகராஜன் ஆகியோா் தலைமையில் சுற்றுச்சுவரையும் இரும்பு கிரில் கேட் நுழைவு வாயிலையும் நல்லாசிரியா் ரா. பால்சாமி திறந்து வைத்து பள்ளிக்கு அா்ப்பணித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் கலந்துகொண்டனா். +

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT