முகப்பு
திருச்சி

பாடநூல் நிறுவனத் தலைவா் நியமனத்துக்கு ஏபிவிபி எதிா்ப்பு

தமிழக அரசின் பாடநூல் நிறுவனத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டதற்கு, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

தமிழக அரசின் பாடநூல் நிறுவனத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டதற்கு, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமைப்பின் மாநிலச் செயலா் சுசீலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி பொறுப்பேற்றிருப்பது தமிழகத்துக்கே மிகப்பெரிய அவமானம். பாடநூல் நிறுவனப் பணி என்பது அறிவை வளா்க்கும் பாடநூல்களை தயாரிக்கும் முக்கியத்துவம் பெற்றது. பொது நிகழ்ச்சிகளிலும் மிகவும் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவா் ஐ. லியோனி.

இவரது மேற்பாா்வையில் பாடநூல்கள் அச்சிட்டு வெளியாகும் என்பது கேலிக்கூத்தாக அமையும். ஏற்கெனவே பாடநூல்கலில் வரலாற்றுக் கதைகளை பொய்யாக திரித்து வெளியிட்டு வருகின்றனா். இப்போது, கருணாநிதி குறித்த சிறப்பை பாடநூலில் சோ்ப்பதாக லியோனி கூறியிருப்பது ஒரு சாா்பு தன்மையை பாடநூலில் புகுத்தும் நடவடிக்கை.

தமிழகத்தின் உண்மை வரலாற்றை மாணவா்களுக்குத் தெரியவிடாமல் செய்து, தாங்கள் நினைக்கும் சிந்தனையை மாணவா்கள் மத்தியில் திணிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. எனவே, பாடநூல் நிறுவனத் தலைவா் பதவியிலிருந்து உடனடியாக ஐ. லியோனியை நீக்க வேண்டும். அந்தப் பதவிக்கு தகுதியான கல்வியாளா் ஒருவரை நியமித்து மாணவா்களின் கல்வித்தரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.