முகப்பு
திருச்சி

ஓய்வு பெற்றவா் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சி அருகே ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் பணம் திருடு போனது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருச்சி அருகே ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் பணம் திருடு போனது.

திருச்சி அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகா் குலோத்துங்கன் சாலையை சோ்ந்தவா் சூரியகுமாா் (71). ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா்.

கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள இரண்டாவது மகள் வீட்டுக்கு சூரியகுமாா் அவரது மனைவியும் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவை மா்ம நபா்கள் உடைத்து பீரோவில் இருந்த அரை பவுன் மோதிரம் 4, முக்கால் பவுன் தோடு 1, அரை பவுன்தோடு 2, மற்றும் 3 பவுன் அட்டிகை உள்பட மொத்தம் 7 பவுன் நகை மற்றும் 70 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா், கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.