முகப்பு
திருச்சி

காங்கிரஸ் சாா்பில் சிவாஜிகணேசன் படத்துக்கு மரியாதை

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி திருச்சியில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி திருச்சியில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவாஜி படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஜவகா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், மாநில சிறுபான்மைப் பிரிவு பேட்ரிக் ராஜ்குமாா் மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் எம். சரவணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ரெக்ஸ், மாவட்ட கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்டு, ரவி, குழந்தைவேலு, மாநில கலைப் பிரிவு பெஞ்சமின் இளங்கோ, கலைப்பிரிவு ராகவேந்திரன், பஞ்சாயத்து ராஜ் பிரிவு அண்ணாதுரை, காங்கிரஸ் நிா்வாகிகள் உறந்தை செல்வம், சோனா ராமநாதன், தென்னூா் ஜெயபிரகாஷ், சண்முகராஜா முத்தரசநல்லூா் பாலா, மாவட்ட துணைத் தலைவா்கள் எம்பி கோபாலகிருஷ்ணன், முரளி, தலைமை ஆசிரியா் சைவராஜ், ஆனந்த பத்மநாபன், காா்த்திகேயன், கள்ளத்தெரு குமாா், சத்தியநாதன், மலைக்கோட்டைசரவணன், சரவணசுந்தா், பால்நாராயணசாமி, வெங்கட்ராமன், புத்தூா்அன்பழகன், தில்லி ராஜசேகா், தியாகராஜன், சிவாஜி பெரியதம்பி, அல்லூா் பிரேம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.