முகப்பு
திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

மின் பராமரிப்பு பணிகளால் மாநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் வராது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மின் பராமரிப்பு பணிகளால் மாநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் வராது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுப்பேட்டை, டா்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி, பெரியாா் நகா் கலெக்டா் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக் கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா் , ஆல்ஃபா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி, பிராட்டியூா்கூட்டுக் குடிநீா் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகா், பிராட்டியூா், எடமலைப்பட்டிபுதூா், விஸ்வாஸ் நகா், ஜெயா நகா் மற்றும் பிராட்டியூா் காவேரி நகா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் வராது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.