முகப்பு
திருச்சி

கிறிஸ்தவ மத போதகா் மீது நடவடிக்கை கோரி மனு

 இந்திய பிரதமரை இழிவாகப் பேசிய கிறிஸ்தவ மதபோதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅகில இந்திய இந்து மகாசபா அமைப்பினா் மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 இந்திய பிரதமரை இழிவாகப் பேசிய கிறிஸ்தவ மதபோதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅகில இந்திய இந்து மகாசபா அமைப்பினா் மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து இந்து மகாசபை அமைப்பின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் அளித்த மனு விவரம்:

கடந்த 2 நாள்களாக சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு காணொளியில் மத போதகா் ஒருவா் பொது மேடையில் இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறாா்.

மேலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை இழிவு படுத்தியும் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியிருக்கிறாா். அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.