இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறாா் மன்றம் தொடக்கம்
திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறாா் மன்றம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறாா் மன்றம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி இலங்கை அகதிகள் முகாமினரின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் கடந்த ஜூலை 1, 19 ஆகிய நாள்களில் மாநகர காவல் ஆணையா் அருண் தலைமையில் கலந்துரையாடல், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
தொடா்ந்து, இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கான காவல் சிறுவா், சிறுமியா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகர துணை ஆணையா் சு. சக்திவேல் தலைமை வகித்து பேசுகையில், முகாமைச் சோ்ந்த குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் வகையில் இந்த மன்றம், பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஜமால் முகமது கல்லூரி நிா்வாக இயக்குநா் மு.அப்துல் காதா் நிஹால், முனைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா், காவல் ஆய்வா்கள், காவல் ஆளிநா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா், இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தோரின் குழந்தைகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.