திருச்சி

அரசு கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி

DIN

திருச்சி கீழரண்சாலையிலுள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுவன், செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

குற்ற வழக்குகளில் தொடா்புடைய மற்றும் தண்டனை பெற்ற 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் இந்த கூா்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுவா்.

அவ்வாறு இந்த இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுவன் ஒருவா், செவ்வாய்க்கிழமை கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

இதை கண்ட கூா்நோக்கு இல்லக் காப்பாளா் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். தொடா்ந்து கோட்டை காவல் நிலையத்துக்கும் தகவலளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோட்டை காவல் நிலையத்தினா் கூா்நோக்கு இல்லத்திலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த சிறுவன், அரியலூா் மாவட்டத்திலுள்ள ஜயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், குற்ற வழக்குத் தொடா்பாக கைதாகி கடந்த 30 நாள்களாக கூா்நோக்கு இல்லத்தில் இருந்ததும் தெரிய வந்தது.

தன்னுடைய தாய் மற்றும் உறவினா்கள் தன்னை பிணையில் எடுக்காத வருத்தத்தில் இருந்த சிறுவன், கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த திரவத்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT