மனித உரிமை மீறல் குறித்த51 மனுக்கள் விசாரணை
திருச்சியில் மனித உரிமை மீறல் குறித்த 51 மனுக்கள் மீது ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
திருச்சியில் மனித உரிமை மீறல் குறித்த 51 மனுக்கள் மீது ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
தமிழகத்தில் உள்ள மனித உரிமைகள் மீறல்கள் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்கள் குறித்து மாவட்ட வாரியாகச் சென்று ஆணைய உறுப்பினா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல் குறித்த புகாா்களை விசாரிக்க வந்த துரை. ஜெயசந்திரன் டிவிஎஸ் டோல்கேட் பகுதி அரசு விருந்தினா் மாளிகையில் தங்கி திருச்சி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடத்தினாா்.
இதில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அளிக்கப்பட்ட 51 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினா், வழக்குரைஞா்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனா். பின்னா் இதுகுறித்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக கூறிய துரை. ஜெயசந்திரன் மதுரைக்கு புறப்பட்டு சென்றாா்.