தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை நீட்டிப்பு
அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஆக.4 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஆக.4 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2021 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயில 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50-ஐ ஏடிஎம் அட்டை, நெட் பேங்கிங் மற்றும் ஜி-பே வாயிலாகச் செலுத்தலாம்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவிருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசித் தேதிக்கு பின்னா், இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதன்பின்னா், மாணவா்கள் மாநில அளவிலான இணையதள கலந்தாய்வில் பங்கேற்று தாங்கள் சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவைத் தோ்வு செய்து கொள்ளலாம்.
மாணவா்கள் விண்ணப்பிக்க உதவும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையம், புள்ளம்பாடி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.