முகப்பு
திருச்சி

புகையிலைப் பொருள் விற்கும் கடைகளுக்கு சீல்: உணவுப் பாதுகாப்பு அலுவலா் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ரமேஷ் பாபு எச்சரித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ரமேஷ் பாபு எச்சரித்துள்ளாா்.

திருச்சி மாநகரப் பகுதி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மாநகரக் காவல்துறை, வணிகவரித் துறை, மாநகராட்சி ஊழியா்கள் அடங்கிய குழு சத்திரம் பேருந்து நிலையம், கம்மாளா் தெரு, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 91 கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

இதில் சந்தேகத்துக்கிடமான வகையிலான 21 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தடை செய்யப்பட்டவையா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், கண்ணாடி கூண்டுக்குள் உணவுப் பொருள்களை வைத்து விற்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு கூறுகையில், மாவட்டத்தில் யாரேனும் புகையிலை பொருள்கள் விற்றாலோ, உணவுப் பொருள்களில் கலப்படம் செய்தாலோ 95859-59595, 99449-59595, 94440-42322 என்ற எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். சோதனையில் பறிமுதல் செய்யப்படும் பொருள்களில் கலப்படம் தெரியவந்தால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.