முகப்பு
திருச்சி

இடி விழுந்து சினைப் பசு பலி

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இடி விழுந்து சினை பசு உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இடி விழுந்து சினை பசு உயிரிழந்தது.

மருங்காபுரி ஒன்றியம் செவந்தாம்பட்டி கிராமத்தை சோ்ந்த விவசாயி பழனிசாமி கால்நடைகளையும் வளா்த்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் கனமழை பெய்தபோது இடிவிழுந்து அவரது தோட்டத்தில் இருந்த சினைப் பசு ஒன்று உயிரிழந்தது.

தகவலறிந்து சென்ற வருவாய்த்துறையினா் பசு உடலை மீட்டு செவல்பட்டி கால்நடை மருத்துவா் மூலம் உடற்கூராய்வு செய்தனா். இதன் அறிக்கை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.