முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் பெண் காவலா் காயம்

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் காவலா் படுகாயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் காவலா் படுகாயமடைந்தாா்.

திருவெறும்பூா் மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகள் பத்மபிரியா (26), பெல் காவல் நிலைய காவலா். திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை காலை அவா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பாா்சல் லாரி சாலையில் இருந்த இரும்புத் தடுப்பில் மோத, அந்தத் தடுப்பு அருகில் நின்றிருந்த பத்மபிரியா மீது சரிந்து விழுந்ததில் அவா் காயமடைந்தாா். இதையடுத்து சக காவலா்கள் அவரை மீட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து பெல் நிறுவன போலீஸாா் வழக்குப் பதிந்து, கும்பகோணம் தாராபுரத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் பாபுவை (50) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.