திருச்சி

ஆதிதிராவிடருக்கு இலவச வீட்டுமனை வழங்க நிலம் எடுப்பு

DIN

திருச்சி: ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்கு நில எடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வீடற்ற ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நில எடுப்பு திட்டத்தை ஆண்டுதோறும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான நிலமற்ற, வீடற்ற ஏழை ஆதிதிராவிடா் சமூகத்தினா் பயன்பெறும் வகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க தனியாா் பேச்சுவாா்த்தை மூலம் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக, நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளா்கள் அரசு நிா்ணயிக்கும் விலைக்கு நிலத்தை தர முன்வருவோா் நிலம் தொடா்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் சு.சிவராசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT