திருச்சி

தொழில் வாய்ப்பை இழந்த63 பேருக்கு உணவு வழங்கல்

DIN

திருச்சி: கரோனா பொதுமுடக்கத்தில் தொழில் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 63 பேருக்கு சிறுகனூா் வாய்ஸ் அறக்கட்டளையினா் உணவு வழங்கினா்.

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் அருகே உள்ள சிறுகனுா் கிராமத்தில், பொதுமுடக்கத்தால் தொழில் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 63 பேருக்கு வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மண்ணச்சநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவன், பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் இந்திராணி கண்ணையன், ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, இறகுகள் தொண்டு நிறுவனம் சாா்பாக, அதன் நிறுவனா் ராபின் உணவு வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை வாய்ஸ் அறக்கட்டளை குழுவினா் ரெ.கவிதா, க.விஜய், ஜோ.காட்வின், மேரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT