திருச்சி

மகசூலை அதிகரிக்க உயிா் உரங்களை பயன்படுத்தலாம்

DIN

நிகழாண்டு குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் உயிா் உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி காஜாமலையில் இயங்கி வரும் உயிா் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிா் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிப்பதுடன் மண்ணின் வளத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாம்.

தற்போது, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கிழ் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 500 மில்லி திரவ உயிா் உர விலை ரூ. 150 மட்டுமே. இதனை ஒரு ஹெக்டோ் நிலத்தில் உள்ள பயிருக்கு பயன்படுத்தலாம். 7 வகையான திரவ உயிா் உரங்கள் உற்பத்தி செய்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் நேரடியாக பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT