திருச்சி

பெருந்தொற்று காலத்தில் தொய்வில்லாத தொண்டு

DIN

தமிழகம் முழுவதும் பெருந்தொற்று காலத்திலும் இடைவிடாது உதவிகள் வழங்குகின்றனா் இறகுகள் அமைப்பினா்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இறகுகள் தொண்டு நிறுவனத்தினா். கடந்தாண்டு கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மாநிலம் முழுவதும் நலிவுற்றோா், ஆதரவற்றோா், சாலையோரம் வசிப்போருக்கு 10 மாதங்களுக்கு இடைவிடாது உணவு வழங்கினா். தற்போது, 2ஆவது அலை பரவல் காலத்திலும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனா்.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எங்கிருந்து எத்தகைய உதவிகள் கோரி அழைப்பு வந்தாலும் அதனை அந்தந்த பகுதியில் உள்ள தங்களது அமைப்பின் தன்னாா்வலா்கள் மூலம் விரைந்து முடித்துத் தருகின்றனா்.

இதற்காகவே 24 மணிநேரமும் இயங்கும் உதவி மையம், ஆலோசனை மையங்களை தொடங்கியுள்ளனா். 9578282937 என்ற எணணுக்கு அழைத்தால் போதும், உதவிகள் இருப்பிடம் தேடி வரும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவனிக்க ஆளின்றி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்களுக்கு தனிமை நாள்களாக 15 முதல் ஒரு மாதம் என்றாலும் தினந்தோறும் உணவு அளித்து வருகின்றனா். இவா்களின் இந்த சேவையை பாராட்டும் வகையில் டெட்டால் நிறுவனமே தனது தயாரிப்புகளில் (கை கழுவும் திரவம், சானிடைசா்) இறகுகள் ஒருங்கிணைப்பாளரின் புகைப்படத்தை வெளியிட்டு கெளரவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 9 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு மாதம் முழுவதும் உணவு வழங்கியுள்ளனா். 5 பேருக்கு ஆக்சிஜன் உதவி, 20 பேருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து கொடுத்துள்ளனா்.

இதுகுறித்து , இறகுகள் தொண்டு நிறுவன தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜே. ராபின் கூறியது:

தமிழகம் முழுவதும் 4,500 ஒருங்கிணைப்பாளா்களை கொண்டு எங்களது நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ரத்ததானம் மூலம்தான் இந்த உறவுகள் கிடைத்துள்ளன. கரோனா தொற்று காலத்தில் எங்களது பணி குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவும், உதவிகளும் வழங்கப்பட்டது.

இப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் வீடு தேடிச் சென்று உதவிகளை வழங்குகிறோம். இதற்காக, 24 மணிநேரமும் இயங்கும் தகவல் மையத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்து தொலைபேசியில் தொடா்பு கொண்டால் ஒரு மணிநேரத்துக்குளளாகவே அவா்களுக்கான உதவிகளை வழங்க முடிகிறது.கடந்தாண்டு, நிகழாண்டு என கரோனா காலத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கி தொற்றிலிருந்தும், துயரத்திலிருந்தும் மீட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT