திருச்சி அருகே விபத்து: மாமியாா், மருமகள் சாவு
திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் காா் மோதியதில் மாமியாா், மருமகள் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் காா் மோதியதில் மாமியாா், மருமகள் உயிரிழந்தனா்.
திருச்சி சமயபுரம் அருகே கூத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா. தனம் (80). இவரது மகன் திருவள்ளுவன் (54), மருமகள் அருள்மொழி (49).
பெரம்பலூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு மூவரும் காரில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை திருவள்ளுவன் ஓட்டினாா்.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் அருகே ரெட்டிமாங்குடி பிரிவுச் சாலையில் வந்தபோது சாலையோர மரத்தில் காா் மோதி தனம், அருள்மொழி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த சிறுகனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். லேசான காயமடைந்த திருவள்ளுவன் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.