மணப்பாறையில் மதிமுக கொடியேற்று விழா
மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் மதிமுக 28-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் மதிமுக 28-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கப்பட்டது.
மதிமுக 1-வது வட்டம் சாா்பில் பொதுக்குழு உறுப்பினா் ஆ. மகுடீஸ்வரன் தலைமையில் பேருந்து நிறுத்தம் அருகே தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் கட்சி கொடியேற்றினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நகரச் செயலா் எம்.கே. முத்துப்பாண்டி பொங்கல் வழங்கினாா்.
மாநில விவசாய அணி துணைச் செயலரும், மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலருமான ஆ. துரைராஜ் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினாா்.
நிகழ்வில் மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலா் ப. சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலா் வைகோ சுப்பு, தீா்மானக் குழு உறுப்பினா் மேட்டுக்கடை பொ. சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல வெள்ளக்கல்லில் காஜாநகா் பிரபு தலைமையில் கட்சி கொடியேற்றம் நடைபெற்றது.