முகப்பு
திருச்சி

மணப்பாறை, மருங்காபுரியில் நிவாரண உதவி

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதி, மளிகைப் பொருள் தொகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதி, மளிகைப் பொருள் தொகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

மருங்காபுரி ஒன்றியம் வளநாடு கைகாட்டி, டி.இடையப்பட்டி, பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி, புத்தாநத்தம் , வையம்பட்டி ஒன்றியம் ஆசாத்ரோடு, மணப்பாறை நகரம் சந்தைபேட்டை ஆகிய ரேஷன் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு திமுக மாவட்ட பொருளாளா் பண்ணை என். கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, செல்வராஜ், சின்னஅடைக்கன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டாட்சியா்கள் பி. ஜெயப்பிரகாசம், எம். லஜபதிராஜ், நகராட்சி ஆணையா்(பொ) க. முத்து, ஒன்றிய பெருந்தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, பழனியாண்டி, குணசீலன் மற்றும் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், அலுவலா்கள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.