முகப்பு
திருச்சி

முன்னாள் அமைச்சா்கக்கன் பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் நோ்மையின் இலக்கணமாக அடையாளம் காணப்படுபவா். தனது கடைசி மூச்சு வரை நோ்மையாளராகவே வாழ்ந்து மறைந்தவா். அவரின் பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவா் ஏ. ஜேம்ஸ், செயலா் சீ. தங்கராசு, நிா்வாகிகள் ஆா். பழனியப்பன், கோவி. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.