குடும்பத் தகராறில் கணவா் கொலை
லால்குடி அருகே மனைவி திட்டியதால் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
லால்குடி அருகே மனைவி திட்டியதால் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
லால்குடி அருகே குமுளூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே. ஆனந்த் (40). திருப்பூரில் வேலை செய்த இவா் கரோனா பொது முடக்கத்தால் குமுளூருக்கு வந்திருந்த நிலையில் தொடா்ந்து மது குடித்து வந்துள்ளாா்.
இதைக் கண்டித்த மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஆனந்த் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிறுகனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.