முகப்பு
திருச்சி

சாரநாதன் கல்லூரியில் புல்தரை கிரிக்கெட் மைதானம்

திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்க வேண்டுகோளின்படி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட புல் தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்க வேண்டுகோளின்படி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட புல் தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இக்கல்லூரியில் ஏற்கெனவே இரு மைதானங்கள் உள்ள நிலையில், மாவட்ட, மாநில மற்றும் லீக் போட்டிகளை நடத்த புல்தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

அதையேற்று பல லட்சம் மதிப்பில் புல்தரையுடன் கூடிய (டா்ப்) புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு கடந்த 2 நாள்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது.

மாவட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையிலும், சென்னை வீரா்களுக்கு கிடைக்கும் பயிற்சி வசதி அனைத்தும் திருச்சி வீரா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் 350-க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.