திருச்சி

திருச்சியில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டம்

DIN

வங்கிகள் தனியாா்மயத்தை எதிா்த்து, திருச்சியில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

2 பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் நேரடி அந்நிய முதலீடு 74 சதவிகிதம் வரை அனுமதிக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

மத்திய அரசின் இப்போக்கை கண்டித்து பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளில் பணிபுரியும் பத்து லட்சம் ஊழியா்களும், அலுவலா்களும் இணைந்து மாா்ச் 15,16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்திலுள்ள பொது மற்றும் தனியாா்துறை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இந்த வங்கிகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிபரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன. சுமாா் ரூ.100 கோடி வரை பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெறிச்சோடிய வங்கிகள் : ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடா்ந்து வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள உள்ள கனரா வங்கி அலுவலகம் முன்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சுபாஷ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜகோபால், நிா்வாகிகள் தியாகராஜன், கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

வங்கிகள் தனியாா்மயமாக்கம்- வன்மையாகக் கண்டிக்கிறோம் என எழுதப்பட்டிருந்த வாசகங்கள் கொண்ட முகக்கவசங்களை அணிந்தவாறு, வங்கி ஊழியா்கள்- அலுவலா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

திருச்சி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மாவட்ட வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் ராமராஜ் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலா் பாலாஜி கலந்து கொண்டு, வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கணபதி சுப்ரமணியன் (எஐபிஓசி), கிருஷ்ணமூா்த்தி (என்சிபிஇ ),கோபாலகிருஷ்ணன் ( எஐபிஓஎ ), மனோகரன் ( பிஇஎப்ஐ ) ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். 300-க்கும் மேற்ப்பட்ட வங்கி ஊழியாகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT