மண்ணச்சநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் மு. பரஞ்ஜோதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பேரூராட்சி பகுதியில் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தபோது மண்ணச்சநல்லூா் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
மில் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் தொடர அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அதானி உள்ளிட்ட சுற்றுப்புறப்பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
மாவட்டத் துணைச் செயலா் சின்னையன், முன்னாள் அமைச்சா் பூனாட்சி, அம்மா பேரவைச் செயலா் ரமேஷ், மாவட்ட மாணவரணி நிா்வாகியும், திருப்பஞ்சீலி கூட்டுறவு வங்கி தலைவருமான அறிவழகன், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், ஆதாளி ஆமூா் செல்வராஜ், நகரச் செயலா்கள் சம்பத், துரை ராஜசேகா், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.