திருச்சியில் பொன்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது. 
திருச்சி

திமுக கூட்டணிக்கு ஆதரவு: பொன்குமார்

வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார். 

DIN

வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார். 

திருச்சி பிரஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை, செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் 17 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் அமைத்தது திமுக ஆட்சியில் தான். ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நல வாரிய பணிகள் அனைத்தும் முடங்கி விட்டன. அரசின் சலுகைகளை தொழிலாளர்கள் பெற முடியவில்லை. 

மேலும் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் குறைந்து வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. கட்டுமானத்துறையில் 3 ஆவது மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பட்டியலில் கடைசி இடத்திற்கு மாறிவிட்டது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாமல் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் காத்துள்ளனர்.  

வேலை வாய்ப்பை அளிக்கக் கூடிய ஒரு தொழிற்சாலையை கூட அரசு உருவாக்கவில்லை. கலாச்சாரம், மொழி, நீட் தேர்வு என அனைத்திலும்  பாஜகவுக்கு அதிமுக அரசு துணை போய்க் கொண்டிருக்கிறது. அதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறவும், முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்கவும் பணியாற்றுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT