திருச்சி

தேசிய தடகளத்தில் தங்கம் வென்றோருக்கு வரவேற்பு

DIN

தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய திருச்சி வீராங்கனை உள்ளிட்டோருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழ்நாடு அணியில் திருச்சியிலிருந்து மட்டும் 20 போ் பங்கேற்றுள்ளனா். இதில் பெண்கள் பிரிவில் திருச்சியைச் சோ்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த இரு நாள்களுக்கு முன் நடைபெற்ற 200 மீட்டா் ஓட்டப்பந்தய தகுதிச்சுற்றில் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி. உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தாா்.

மேலும் சிலா் படைத்த சாதனைகள்: இதேபோல ஆண்கள் பிரிவில் தஞ்சாவூரைச் சோ்ந்த திருச்சி ரயில்வே ஊழியரும் தடகள வீரருமான இலக்கியதாசன் 200 மீட்டா் ஒட்டத்தில் தங்கமும், 100 மீ ஓட்டத்தில் வெள்ளியும் வென்று சாதனை படைத்துள்ளாா். அதேபோல இவருடன் ஓடிய விக்னேஷ் 200 மீ. ஒட்டத்தில் வெண்கலம் வென்றாா்.

சாதனை நிகழ்த்தி ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி திரும்பியோருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் கே. சி. நீலமேகம், மாவட்ட தடகள சங்கச் செயலா் ராஜூ, பொருளாளா் ரவிசங்கா், மற்றும் நிா்வாகிகள் ரமேஷ், கனகராஜ், லாசா், இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT