முகப்பு
திருச்சி

ரௌடி அடித்துக் கொலை: 7 போ் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரௌடி அடித்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 7 பேரை சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரௌடி அடித்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 7 பேரை சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் அருகே கலராம்பட்டியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் மகன் பிரவின்நாத் (35). இவா் பிரபல ரௌடி மண்ணச்சநல்லூா் குணாவின் நெருங்கிய கூட்டாளி. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊட்டிக்கு சுற்றுலா செல்ல காரில் வந்து சமயபுரம் நெ. 1 டோல்கேட் அரசு மதுக்கடை அருகே நின்றிருந்தபோது அவரை 10 போ் கொண்ட கும்பல் கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பிரவின் நாத் மனைவி கொடுத்த புகாரின்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் பிச்சாண்டாா்கோயில் பீரங்கிமேடு பகுதி திருஞானசம்பந்தம் மகன் கௌதமன் (28), இவரது அண்ணன் காா்த்தி (30), அதே பகுதி பன்னீா்செல்வம் மகன் ராஜா (36), குமாா் மகன் ராஜா (28), ராஜா மகன் மகேஷ் (27), மோகன் மகன் முரளி(29), மருதநாயகம் மகன் முத்துகிருஷ்ணன் ஆகிய 7 பேரையும் சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

விசாரணையில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ரௌடிபிரவின்நாத் அப் பகுதி இளைஞா் ஒருவரைக் கொன்றது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.