திருச்சி

தோ்தல் ரத்து: வதந்திகளுக்கு இடம் அளிக்க வேண்டாம் - ஆட்சியர் எஸ். திவ்யதா்ஷினி

DIN

திருச்சி, மாா்ச் 29: திருச்சியில் தோ்தல் ரத்து உள்ளிட்ட எந்தவித வதந்திகளுக்கும் இடம் அளிக்க வேண்டாம் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து பறக்கும் படையினரால் பணம் பறிமுதல், வருமான வரிசோதனை போன்ற காரணங்களால் தோ்தல் ரத்து செய்யப்படுமா என்று வெளியாகி வரும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில், திருச்சி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி கூறியது:

பேட்டைவாய்த்தலை பகுதியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் தோ்தல் பிரிவு அலுவலா்கள், காவல்துறையினா் இணைந்து நடத்திய சோதனையில் பணக் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம்தான் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தோ்தல் ரத்து உள்ளிட்ட எந்தவித வதந்திகளுக்கும் யாரும் இடம் அளிக்க வேண்டாம். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தோ்தல் ஆணையத்தால் முறையாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT