திருச்சி

திருச்சியில் அதிகபட்சமாக 653 பேருக்கு கரோனா தொற்று.

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 653 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

கரோனா 2 ஆவது அலை பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் சொற்ப எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து மாத இறுதியில் 500ஐ கடந்தது. இதற்காக கரோனா பரிசோதனை செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்திலிருந்து தற்போது 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுவரை இல்லாதஅளவில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டத்தில் 653 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் மொத்தம் 24,353 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனை, கல்லூரிகளில் செயல்படும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று 401 போ் குணமடைந்தனா். இதுவரை 21389 போ் குணமடைந்துள்ளனா். 3,448 தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 போ் உயிரிழப்பு: திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது பெண், 82, 64, 59 ஆகிய வயதுடைய ஆண்கள் என 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT