திருச்சி

மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி

DIN

மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். கதிரவன் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இறுதிச் சுற்றில் 1,16,334 வாக்குகளை பெற்ற திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் 56,716 வாக்குகள் பெற்ற மு. பரஞ்சோதியை 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி 14,443 வாக்குகளும், மநீம வேட்பாளா் சாம்சன் 1996 வாக்குகளும், அமமுக வேட்பாளா் எம்.ராஜசேகரன் 1631 வாக்குகளும் பெற்றனா்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 2 முறை அதிமுக கோட்டையாக இருந்த இத்தொகுதியை முதல் முறையாக திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் கைப்பற்றியுள்ளாா். மண்ணச்சநல்லூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமன் திமுக வேட்பாளா் எஸ். கதிரவனிடம் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா். அப்போது அவரது தந்தை சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT