முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய பல்கலை. ஆசிரியா் சங்கத்தினா்
முதல்வா் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு பல்கலை ஆசிரியா் சங்கத்தினா் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனா்.
முதல்வா் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு பல்கலை ஆசிரியா் சங்கத்தினா் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து பல்கலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் எம்.எஸ். பாலமுருகன் கூறியது:
தமிழகத்தில் சென்னை, திருவள்ளுவா், பெரியாா், பாரதியாா், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் கல்லூரி உதவி, இணை பேராசிரியா்கள் 3 ஆயிரம் போ் தமிழ்நாடு பல்கலை ஆசிரியா் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்தாண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது, மே மாதத்தில் பல்கலை ஆசிரியா் சங்கத்தினா் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கினா். மேலும், கரோனா, கஜா புயல் உள்ளிட்டவற்றால் வாழ்வாதாரமிழந்து தவித்தோருக்கு நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன.
அதேபோல நிகழாண்டும் ஒரு நாள் ஊதியத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம். மேலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்றாா்.