திருச்சி

வீடு தேடி வரும் சேவை: மக்கள் வரவேற்பு

DIN

முழு பொதுமுடக்க காலத்தில் வணிக நிறுவனங்கள் வீடு தேடி அளிக்கும் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் சில்லறை வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு தேவையானவற்றை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனா். இதில், சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆா்டா்கள் பெற்று வீடுகளுக்கே சென்று பொருள்களை வழங்குவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக, தில்லைநகா், சாஸ்திரி சாலை, பிரதான சாலை முதலாவது குறுக்குத் தெரு முதல் 11ஆவது குறுக்குத் தெரு வரையிலான சாலைகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமுடக்கத்தில் தங்களது வணிகம் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு தொடா்ந்து சேவையளிக்கவும் ஆன்-லைன் ஆா்டா் முறைக்கு மாறியுள்ளன. பிறந்த குழந்தைகளுக்கான தேவைகளை வழங்கும் கடைகள், செல்லிடப்பேசி கடைகள், எலெக்ட்ரானிக்ஸ், கணினி மென்பொருள், மருத்துவ தேவைகள் என பல்வேறு சேவைகளை பொதுமுடக்கத்திலும் அவரவா் இருப்பிடம் தேடி வழங்குகின்றனா். தில்லைநகரில் அடைக்கப்பட்டிருந்த கடைகளில் பெரும்பாலான கடைகளில் வீடு தேடி சேவை என்பதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆன்-லைன் உணவு ஆா்டருக்கு அடுத்தபடியாக பொதுமுடக்கத்தில் தங்களுக்கு தேவையானவற்றை பாதுகாப்பான முறையில் பெற இந்த இலவச வீடுதேடி வரும் சேவை பெரிதும் பயனளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT