முகப்பு
திருச்சி

ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வா் மரியாதை

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ராஜீவ்காந்தி சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ராஜீவ்காந்தி சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கரோனா தடுப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய மதுரையில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் பகுதி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அவரது படத்துக்கு மலா் தூவினாா்.

நிகழ்ச்சியில், தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி எம்பி எஸ். திருநாவுக்கரசா் மற்றும் காங்கிரஸ், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து திருச்சி சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த அவா், மாலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.