கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளான மே 21 ஆம் தேதியை கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளாக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதியேற்கப்பட்டது.
உறுதி மொழியை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் வாசிக்க, மாநகராட்சி பணியாளா்கள் ஏற்றனா்.
இதேபோல ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிசேகபுரம் கோட்ட அலுவலகங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி உதவிஆணையா்கள் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியில் நகரப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி , உதவி ஆணையா் திருஞானம் , ச.நா.சண்முகம், சி.பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.